search icon
என் மலர்tooltip icon
    • பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்றுடன் முடிந்துள்ளது.
    • தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 33 முதல் 37 இடங்களில் வெற்றி பெறும் என தகவல் வெளியானது.

    நியூஸ் 18 கருத்துக் கணிப்பு

    தமிழகத்தில் திமுக 20 முதல் 22 இடங்கள் கைப்பற்றும்

    காங்கிரஸ் 6-8 இடம்

    பாஜக 1-3

    அதிமுக 0-2

    இந்தியா டுடே

    தமிழகத்தில் திமுக 20-22

    காங்கிரஸ் 6-8

    அ.தி.மு.க. 2

    இந்தியா கூட்டணி 33-37

    ஏபிபி- சி வோட்டர் (ABP - C Voter)

    தி.மு.க. கூட்டணி 37-39

    அ.தி.மு.க. 1

    பா.ஜ.க. 1

    • ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்பில் பா.ஜனதா 359 தொகுதிகளை கைப்பற்றும்.
    • இந்தியா நியூஸ் கருத்து கணிப்பில் பா.ஜனதா 371 தொகுதிகளை கைப்பற்றும்.

    543 தொகுதியில் ஒரு இடத்தில் பா.ஜனதா போட்டியின்றி வெற்றி பெற்றது. இதனால் 542 இடங்களுக்க ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைறெ்றது. இன்று மாலை 6 மணியுடன் கடைசி கட்ட வாக்குப்பதி முடிவடைந்தது.

    இதனைத் தொடர்ந்து செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன.

    ரிபப்ளிக் டிவி- பி.மார்க்-மேட்ரிஸ் (Republic TV- PMARQ-Matrize)

    பா.ஜனதா கூட்டணி  359 தொகுதிகளில் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி 154 தொகுதிகளில் வெற்றி பெறும்.

    இந்தியா நியூஸ்- டி. டையாமிக்ஸ் (India News- D-Dyamics)

    பா.ஜனதா கூட்டணி 371 தொகுதிகளில் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெறும்.

    ஜன் கி பாத் (jan Ki Baat)

    பா.ஜனதா கூட்டணி 362 முதல் 392 வரை. இந்தியா கூட்டணி 141 முதல் 161 வரை

    ரிபப்ளிக் பாரத்- மாட்ரிஸ்

    பா.ஜனதா கூட்டணி 353 முதல் 368 வரை. இந்தியா கூட்டணி 118 முதல் 133 வரை

    என்டி-டிவி

    பா.ஜனதா கூட்டணி 365 தொகுதிகளில் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி 142 தொகுதிகளில் வெற்றி பெறும்.

    • ரோகித் சர்மா 19 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • சூர்யகுமார் யாதவ் தனது பங்கிற்கு 18 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியா இன்று பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 6 பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் எம்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

    அடுத்து ரோகித் சர்மா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 32 பந்தில் 53 ரன்கள் (தலா நான்கு பவுண்டரி, சிக்ஸ்) எடுத்து ரிட்டையர்டு அவுட் மூலம் வெளியேறினார்.

    அடுத்து சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார். ரோகித் சர்மா 19 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் தனது பங்கிற்கு 18 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். ஷிவம் டுபே 16 பந்தில் 14 ரன்கள் எடுத்தார்.

    ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 40 ரன்கள் (2 பவுண்டரி, 4 சிக்ஸ்) அடிக்க இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

    • சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
    • இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. இத்துடன் படக்குழு வெளியிட்ட வீடியோவில் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளது.

     


    இந்த நிலையில், சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சூர்யா 44 படத்தில் ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோரும் நடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பீகார், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை சந்திக்கும்.
    • கடந்த வருடம் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்தல் குறித்த பெரும்பாலான கணிப்புகள் தவறாக அமைந்தது- சசி தரூர்.

    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி 350 இடங்களை தாண்டி பிடிக்கும் என தெரிவித்துள்ளது.

    இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி அதிகமான இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என உறுதியான நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், கருத்துக் கணிப்பு அவர்களுக்கு ஏற்ற வகையில் இல்லை.

    இந்த நிலையில் திமுக தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில் "இந்தியா கூட்டணி எளிதாக சுமார் 300 இடங்களை பிடிக்கும்.

    பீகார், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை சந்திக்கும்" என்றார்.

    கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறுகையில் "நான் எந்தவொரு கருத்துக் கணிப்பையும் நம்புவதில்லை என்பதை தொடர்ந்து சொல்லி வருகிறேன். கர்நாடகா மாநிலத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெறுவோம் என்பதை நம்பிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    மல்லிகார்ஜூன கார்கே மகன் பிரியங் கார்கே கூறுகையில் "மக்களின் தீர்ப்பிற்காக காத்திருப்போம். எங்களுக்கு அதீத நம்பிக்கை உள்ளது. நாங்கள் முற்போக்கு அரசியல், வேலைவாய்ப்பு, வெளிநாடு கொள்கை உள்ளிட்டவை பற்றி பேசியுள்ளொம். மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்கு அளித்திருப்பார்கள் என்பதை உறுதியாக கூற முடியும்" என்றார்.

    காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் கூறுகையில் "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மிகவும் அறிவியல் சார்ந்தவை கிடையாது. கடந்த வருடம் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்தல் குறித்த பெரும்பாலான கணிப்புகள் தவறாக அமைந்தது.

    உண்மையான கருத்துக்கணிப்பில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். கர்நாடகாவில் பாஜக கணிசமான அளவு தோல்வியடையும். கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் நிச்சயமாக வெற்றி பெறாது" என்றார்.

    • தினேஷ் கார்த்திக் இன்றளவும் சிறப்பான பேட்டிங் வெளிப்படுத்தி வருகிறார்.
    • சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக அவர் அறிவித்தார்.

    புதுடெல்லி:

    தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் இன்றளவும் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்தார். ஐ.பி.எல் தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,842 ரன்களை குவித்துள்ளார்.

    இந்நிலையில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.

    இதுதொடர்பாக, தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இந்த நீண்ட பயணத்தை இனிமையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய எனது பயிற்சியாளர்கள், கேப்டன்கள், தேர்வாளர்கள், அணியினர் மற்றும் துணைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

    மில்லியன் கணக்கானோர் விளையாடும் இந்த நாட்டில், நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். பல ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் நன்மதிப்பை பெற்றிருப்பது எனக்கு கிடைத்த கூடுதல் பாக்கியம்.

    இத்தனை ஆண்டுகள் எனக்குத் துணையாகவும், தூணாகவும் இருந்தவர்கள் என்னுடைய பெற்றோர். அவர்களின் ஆசீர்வாதம் இல்லாவிட்டால் நான் இன்று இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. என்னுடைய இந்தப் பயணத்துக்காக தன்னுடைய தொழில்முறை விளையாட்டிலிருந்து வெளியேறி, எனக்காக துணைநின்ற தீபிகாவுக்கு நான் என்றும் கடன்பட்டிருக்கிறேன்.

    விளையாட்டைப் பின்பற்றும் ரசிகர்களுக்கும், பாலோயர்ஸ்களுக்கும் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


    • தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து வாக்காளர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • அவர்களின் தீவிர பங்கேற்பே நமது ஜனநாயகத்தின் அடிக்கல்லாகும்.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலின் 7 கட்ட வாக்குப்பதிவு இன்றுடன் முடிவடைந்தது. ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி இன்று வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஜூன் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் மக்கள் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க வாக்களித்து இருப்பார்கள் என்ற நம்பிக்கை பிரதமர் மோடி வெளிப்படுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா வாக்களித்துள்ளது. தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து வாக்காளர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் தீவிர பங்கேற்பே நமது ஜனநாயகத்தின் அடிக்கல்லாகும்.

    அவர்களின் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் நமது தேசத்தில் ஜனநாயக உணர்வு செழித்து வளர்வதை உறுதி செய்கிறது. இந்தியாவின் நரி சக்தி மற்றும் யுவ சக்தி ஆகியவற்றை நான் சிறப்பாகப் பாராட்ட விரும்புகிறேன். தேர்தலில் அவர்கள் வலுவாக இருப்பது மிகவும் ஊக்கமளிக்கும் அறிகுறியாகும்.

    அவர்கள் (வாக்காளர்கள்) எங்களின் சாதனைகளையும், ஏழைகள், விளிம்புநிலை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வில் தரமான மாற்றத்தை ஏற்படுத்திய விதத்தையும் பார்த்து மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் தேர்ந்தெடுக்க வாக்களித்திருப்பார்கள் என்பதை என்னால் சொல்ல முடியும்.

    சந்தர்ப்பவாத இந்தியா கூட்டணி வாக்காளர்களை ஒருங்கிணைக்க தவறிவிட்டது. அவர்கள் சாதி வெறி, வகுப்புவாத மற்றும் ஊழல்வாதிகள். இந்த கூட்டணி வாரிசு அரசியலை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு தேசத்திற்கான எதிர்கால பார்வையை முன்வைக்கத் தவறிவிட்டது.

    மோடி வசை பாடுதல் என்ற ஒரே விசயத்துடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இத்தகைய பிற்போக்கு அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர்.

    எங்களின் வளர்ச்சி திட்டங்களை மிக நுணுக்கமாக மக்களுக்கு விளக்கி அவர்களை வாக்களிக்க தூண்டியதற்காக ஒவ்வொரு பாஜக தொண்டரையும் நான் பாராட்டுகிறேன். இவர்கள் வெற்றிக்கு மிகப்பெரிய பலம்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • வாழ்த்து தகவல்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன.
    • சமூக வலைதளத்தில் பதிவிட முடிவு செய்தேன்.

    இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மற்றும் தொலைகாட்சி பிரபலம் ரிதிமா பண்டிட் இடையே இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. திருமணம் குறித்து வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று ரிதிமா பண்டிட் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "இது சிலரது கற்பனை, என்றே நினைக்கிறேன். சிலர் கதைகளை உருவாக்குகின்றனர், அவை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விடுகின்றன. தனிப்பட்ட முறையில் எனக்கு சுப்மன் கில் பற்றி எதுவும் தெரியாது."

     


    "இது மிகவும் அபத்தமானது. காலை முதலே எனக்கு வாழ்த்து குறுந்தகவல்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அவற்றுக்கு மறுப்பு தெரிவித்து எனக்கு சலித்துவிட்டது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் பதிவிட முடிவு செய்துவிட்டேன்," என்று தெரிவித்தார்.

    இது குறித்த பதிவில், "இன்று காலை முதலே எனக்கு நிறைய செய்தியாளர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர், இப்படி ஒரு விஷயம் நடைபெறவே இல்லை. பலருக்கு என் திருமணம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என நினைக்கின்றார்கள், ஆனால் யாருடன்? இல்லை இப்படி எதுவும் நடைபெறவில்லை. இப்போதைக்கு எதுவும் இல்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்தார்.
    • இந்த தேர்தலில் பா.ஜ.க. 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றார்.

    புதுடெல்லி:

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் படி பா.ஜ.க. 350 இடங்களைப் பிடிக்கும் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று வீடியோ வெளியிட்டார். அதில் ஜே.பி.நட்டா கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. முறையான ஏற்பாடுகளை செய்து வெற்றிகரமாக வாக்குப்பதிவை நடத்தி முடித்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் வாக்குகளைச் செலுத்திய அனைத்து வாக்களர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி கடுமையாக உழைத்துள்ளார். மொத்தம் 206 பிரசார பொதுக்கூட்டங்கள், 23 வாகன பேரணிகள் மற்றும் 82 பேட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். தேர்தலின்போது கடுமையாக உழைத்த கட்சி தொண்டர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதற்காக மக்கள் வாக்கு செலுத்தியிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். குடும்ப அரசியல் மற்றும் ஊழல் செய்பவர்களை மக்கள் ஒதுக்கிவிட்டார்கள். இந்த தேர்தலில் பா.ஜ.க. 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். அதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

    • ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்த மாடல் அறிமுகம்.
    • 73 கிலோமீட்டர்கள் மைலேஜ் வழங்கும் என்று தகவல்.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்பிலெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்பிலெண்டர் பைக்கின் விலை ரூ. 82 ஆயிரத்து 911, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஹீரோ நிறுவனத்தின் 30 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த பைக்கிலும் ஏர் கூல்டு, 97.2சிசி, எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 8.02 ஹெச்.பி. பவர், 8.05 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த பைக் லிட்டருக்கு 73 கிலோமீட்டர்கள் மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

     


    புதிய ஹீரோ ஸ்பிலெண்டர் பைக் டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. இந்த பைக்கின் இண்டிகேட்டர் வடிவம் சற்றே வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இதன் ஃபியூவல் டேன்க் மற்ற ஸ்பிலெண்டர் மாடல்களில் இருப்பதை போன்றே சதுரங்க வடிவம் கொண்டுள்ளது.

    எக்ஸ்-டெக் மாடல் என்பதால் புதிய ஸ்பிலெண்டர் பைக்கில் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் விலை மற்ற எக்ஸ்டெக் மாடல்களை விட ரூ. 3 ஆயிரம் வரை அதிகம் ஆகும். 

    ×